பிறந்த நாள் கொண்டாடும் விக்ரம்.. ‘சியான் 62’ டைட்டில் நாளை வெளியீடு?..

0
90

‘Chiyaan 62’: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சியான் 62’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த நிலையில் மீண்டும் இவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்த ‘சியான் 62’ படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒரு வில்லன் தான் எஸ்.ஜே.சூர்யா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கண்ட ரசிகர்கள், ‘படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் கொடுத்தது போதும் எப்போது படத்தின் ஷூட்டிங் நடைபெறும். வேறு புதிய அப்டேட்டுகள் கொடுங்கள்’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனையறிந்த படக்குழு தற்போது ஒரு புதிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, ‘சியான் 62’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்தது. கடந்த இரண்டு தினங்களாக சியான் 62 படக்குழு ஏப்ரல் 17ஆம் தேதி பெரிய அப்டேட் கொடுப்பதாக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

தொடர்ந்து படக்குழு வெளியிடும் இந்த போஸ்டரைக் கண்ட ரசிகர்கள், நாளை (ஏப்ரல் 17) சியான் விக்ரம் பிறந்த நாள் என்பதால் ‘சியான் 62’ படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து செய்தி வைரலாகி வருகிறது.

இதன் காரணமாக கட்டாயம் நாளை படத்தின் டைட்டில் வெளியாகும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு நாளை வெயிட்டான அப்டேட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here