அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் இ ஏ.வி.ராஜு. இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரிஷா தனது ஆதங்கை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, போகிற போக்கில் நடிகைகளை கீழ்தரமாக பேசியது கண்டனத்திற்குறியது. இது சமுதாயத்தை பாதிக்கும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, திரிஷா விவகாரம் குறித்து அதிமுக பிரமுகர் மீது திரைத்துறையினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் ரசிகர்களும் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.