சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) திறந்து வைக்கிறார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைவரானார். தொடர்ந்து, கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டாயம் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
பின்னர் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் இந்த நவீன விளக்கப்படங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) இரவு 7 மணியளவில் திறந்து வைக்கிறார்.