ரஜினி ஆசியுடன் புதிய பயணத்தை தொடங்கிய தங்கதுரை!.. என்ன விஷயம்னு தெரியுமா?..

0
47

Comedian Thangadurai: பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தனது தனித்துவமான பழைய காமெடிகளை செய்து மக்கள் மனதில் பழைய ஜோக் தங்கத்துரை என பெயர் எடுத்தவர் தான் டைகர் கார்டன் தங்கதுரை.

தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு எப்படி பழைய ஜோக் தங்கதுரை என பெயர் வந்ததோ அதேபோல், டைகர் கார்டன் தங்கதுரை என்ற பெயருக்குப் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது.

தங்கதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். அதன் காரணமாக அவரது நண்பர்கள் புளியந்தோப்பு என்ற பெயரை டைகர் கார்டன் என மாற்றி, டைகர் கார்டன் தங்கதுரை என அழைத்து வந்தனர்.

சிறு வயது முதலே காமெடி, மிமிக்கிரி என அனைவரையும் ஜாலியாக வைத்திருந்த தங்கத்துரைக்கு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலக்கப்போவது யாரு முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவரும் அரியப்படும் நபராக மாறினார்.

அவரது கடி ஜோக், காமெடி, பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் வித்தியாசம் கொண்டவராக இருப்பதால் மக்கள் மனதில் தங்கதுரை நீங்கா இடம் பித்திருக்கிறார். அந்த தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்கதுரை கட்டாயம் இடம்பெற்றிருப்பார்.

சின்னத்திரையில் இருந்த தங்கதுரை ஒருகட்டத்தில் படிப்படியாக வெள்ளித்திரைக்குச் சென்றார். சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தங்கதுரை தற்போது தனக்கென ஒரு புதிய பாதையையும், இழக்கையும் கொண்டு பயணத்தை தொடங்கியிருக்கிறார். மேலும், ரஜினிகாந்த்துடன் இருக்கும் ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து தங்கதுரை கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் செய்ததுபோல மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் ரஜினிகாந்த்திடம் கூறி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன்.

அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30ஆயிரம் மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. ‘மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்’.” எனக் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கதுரைக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் பெயர் சூட்ட வேண்டும்’ – சசிகுமார் வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here