பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை மீது புகார்..!

0
106

Sonu Srinivas Gowda: கன்னட சினிமாவில் ‘காட்பரி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து, இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார். சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா சமீபத்தில் ஒரு சிறுமியை தத்தெடுத்ததாக தகவல் வெளியானது.

மேலும், அந்த சிறுமியை அவர் சட்டவிரோதமாக தத்தெடுத்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. இதற்கிடையே, தத்தெடுத்த சிறுமியோடு இணைந்து சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா வீடியோ ஒன்றை எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக குழந்தையை தத்தெடுத்ததாக கூறி அவர் மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சோனுவை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது சோனு ஸ்ரீனிவாஸ் கவுடாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “ஒரு ஏழை குழந்தையை தத்தெடுத்து வீட்டிற்கு அழைத்து வந்ததற்கு பாராட்டுகள்.

இல்லையென்றார் எல்லோரும் அமைதியாக இருங்கள்” என்று காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here