ஓடிடியில் ரிலீஸாகும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’..! எப்போ தெரியுமா..!

0
129

‘Conjuring Kannappan’: கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த திரைப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைபடத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கேம் டிசைனரான சதீஷ், சூனியம் வைக்கப்பட்ட ஒரு ரெக்கையை தொட்டதால் பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கிறார். அந்த கனவில் உயிர் பிரிந்தால் நிஜ உலகிலும் உயிர் பிரிந்து விடும் என்ற நிலை ஏற்படுகிறது.

ஹீரோ மட்டுமன்றி, அவரது குடும்பமே அந்த கனவிற்குள் சிக்கிக்கொள்கின்றனர். பேயின் பிடியில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பது தான் கதை. இதனை காமெடியுடன் சேர்த்து கூறியுள்ளனர். ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

இந்த நிலையில், ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் வரும் ஜனவரி 5ஆம் தேதி ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: பல கோடி ரூபாய்க்கு வியாபாரமான ‘விடாமுயற்சி’ படம்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here