விஷால் – லைகா விவகாரம்: ‘வரவு செலவுகளை ஆராய ஆடிட்டர் நியமனம்’ – நீதிபதி உத்தரவு.!

0
124

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றறார்.

அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதனை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை விஷால் வெளியிட முயன்றதாக தெரிகிறது. இதனால், விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கில் நடிகர் விஷால், ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது.

இந்த விசாரணையில், இரு தரப்பினரும் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் சார்பில் ஆடிட்டர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஶ்ரீகிருஷ்ணா என்ற ஆடிட்டிரை நியமித்து உத்தரவிட்டது. இரு நிறுவனங்களின் மூன்று வருட கணக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here