Theatres: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் தினத்தற்கு தமிழ்நாட்டின் 1168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த நாள் முதல் வழக்கம் போல் திரையரங்குகள் இயக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.