ஜி.வி.பிரகாஷ் தோளில் படத்து தூங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புரமோ..

0
141

Dear Promo: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளான ‘மஜா வெட்டிங்’ பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ‘டியர்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. காமெடி கலந்த காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கும் குரட்டை விடுவதில் பிரச்சினை, கதாநாயகனுக்கு தூங்கும் பிரச்சினை என வித்தியாசமான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால் படக்குழு தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒரு நகைச்சுவை வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here