Sleeping Beauty’ – குறட்டை சத்தத்தை வைத்து வெளியான ‘டியர்’ பாடல்..!

0
145

DeAr: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து செகண்ட் சிங்கிள் பாடலான ‘மஜா வெட்டிங்’ பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது, புதிய பாடலான ‘Sleeping Beauty’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here