‘குட் நைட்’ செகண்ட் பார்ட் தான் ‘டியர்’ படம்.. ரசிகர்கள் நெகட்டிவ் ரெஸ்பான்ஸ்.. என்ன காரணம்?

0
79

DeAr: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து செகண்ட் சிங்கிள் பாடலான ‘மஜா வெட்டிங்’ பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது இந்த படத்தின் கதாநாயகனுக்கு தூக்கும் வியாதி இருப்பதுபோல கதாநாயகிக்கு குறட்டை விடும் நோய் உள்ளது. இந்த விஷயம் திருமணத்திற்குப் பிறகு தான் கதாநாயகனுக்கு தெரியவருகிறது.

அதன் பிறகு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கதைக்களமாக உருவாகியுள்ளது. இந்த கதை தான் தற்போது படத்திற்குப் பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. ஏற்கனவே இதே கதைக்களத்தில் மணிகண்டன் நடிப்பில் ‘குட் நைட்’ என்ற படம் வெளியானது.

அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த அளவிற்கு இந்த குட் நைட் படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகவுள்ள ‘டியர்’ படத்தின் கதையும் அதேபோல் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ‘குட் நைட்’ படமும் ‘டியர்’ படமும் 2022ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது.

ஒரே மாதிரியான கதைக்களம் இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ‘டியர்’ படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here