‘DeAr’: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘டியர்’ படத்தின் முதல் பாடல் தயாராகி வருகிறது, விரைவில் வெளியாகும் என ‘X’ தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.