‘டியர்’ படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு..!

0
102

‘DeAr’: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான ‘தலைவலி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘டியர்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும், இந்த டியர் படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here