காமெடி கலந்த காதல் கதை – வித்தியாசமான கதை களத்துடன் வெளியான ‘டியர்’ டிரைலர்..!

0
104

DeAr Trailer: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளான ‘மஜா வெட்டிங்’ பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது ‘டியர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. காமெடி கலந்த காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கும் குரட்டை விடுவதில் பிரச்சினை, கதாநாயகனுக்கு தூங்கும் பிரச்சினை என வித்தியாசமான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், டிரைலர் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here