DeAr Second Single: இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் ரோஹினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக உருவகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் ‘டியர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தலைவலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘டியர்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘மஜா வெட்டிங்’ பாடல் புரோமோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு பாடல் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் புரோமோ மட்டும் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.