‘Demonte Colony 2’: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நிதி நடித்திருக்கும் படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும், யூடியூப்பில் ட்ரெண்டிங் நம்பர் 1-ல் உள்ளது.
2015ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் திரைக்கு வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் படத்தின் டிரெய்லர் நேற்று யூடியூப்பில் வெளியானது. இந்த டிரெய்லரில், மிரட்டலான இசையுடன் நடுங்க வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
மேலும், ஒவ்வொறு காட்சிகளும் பார்ப்பதற்கு விருவருப்பாக அமைக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரெய்லரைப் பார்த்துள்ளனர். நடிகர் அருள்நிதியின் படம் என்றாலே அது திரில்லிங்காக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவ்வாறான கதைகளைத் தான் அருள்நிதி தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகமும் ஒன்று. முதல் பாகத்திலேயே அருள்நிதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 2’ படத்திலும் அருள்நிதி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது டிரெய்லரைப் பார்த்தபோது தெரியவருகிறது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு காத்திருந்த படங்கள் வரிசையில் ‘டிமான்ட்டி காலனி’ இரண்டாம் பாகமும் ஒன்று. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றனர்.