‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

0
134

இயக்குநர் எழில் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகவுள்ள படம் ‘தேசிங்கு ராஜா 2’. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமல், இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

வழக்கம்போல் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பல காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here