DNS படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்..! படக்குழு அறிவிப்பு..!

0
79

DNS: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து, தனுஷின் 51ஆவது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி தனுஷின் 51ஆவது படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது தனுஷ் படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘Vadakkupatti Ramasamy’: சந்தானம் குரலில் வெளியாகவுள்ள முதல் பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here