‘DEVIL’: ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும், மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சமீபத்தில் ‘டெவில்’ படத்தின் ‘கடவுளுக்கு கோரிக்கை’ என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது ‘டெவில்’ படத்தின் அடுத்த பாடலான ‘COME AND KISS ME’ வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலையும் மிஷ்கின் எழுதி, இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘டெவில்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், மிஷ்கின் இசையில் வெளியாகிய இந்த வீடியோ பாடலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் குரலில் வெளியான ‘லவ்வர்’ படத்தின் புதிய பாடல்..!