மிஸ்கின் இசையில் இன்று வெளியாகும் ‘டெவில்’ பாடல்..!

0
88

Kadavulukku Korikkai: ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘டெவில்’ படத்தின் ‘கடவுளுக்கு கோரிக்கை’ என்ற வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக லிரிக் பாடல் வெளியான நிலையில் தற்போது அதன் வீடியோ பாடல் வெளியாகவுள்ளது. ‘டெவில்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், மிஷ்கின் இசையில் வெளியாகவுள்ள இந்த வீடியோ பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘தமிழக முன்னேற்ற கழகம்’.. வைரலாகும் நடிகர் விஜய்யின் கட்சி பெயர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here