‘டெவில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
70

‘Devil’: ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.

இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘டெவில்’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here