ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘3’. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்த படத்தில் அனிரூத் இசையில், தனுஷின் குரலில் இடம்பெற்ற ‛கொலவெறி’ பாடல் உலகளவில் மாபெரும் ஹிட்டடித்தது. அதேபோல படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘3’ திரைப்படம் ரீ ரிலீஸாகி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து, விரைவில் வெளிநாடுகளிலும் ‘3’ திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதனை யு.ஐ.இ விநியோக நிறுவனம் வெளியிடுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இதன் முதற்கட்டமாக மார்ச் 8ஆம் தேதி மலேசியாவில் ‘3’ படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.