மாஸ் லுக்கில் தனுஷ்..! வைரலாகும் ‘குபேரா’ ஷூட்டிங்க் புகைப்படங்கள்..!

0
101

Kubera: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51ஆவது படமான ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. அங்கு, தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இது குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. அதில், தனுஷ் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தனுஷின் தோற்றம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இரண்டு புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here