தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்.. தெலுங்கு தயாரிப்பாளரிடம் இருந்து வந்த மிரட்டல்..

0
145

Kubera: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51ஆவது படமான ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. அங்கு, தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. தனுஷ் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தனுஷின் தோற்றம் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுக்குப் பிரச்சினை வந்துள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் நரேந்திரா என்பவர் வர்த்தக சபையில் வைத்து ‘குபேரா’ படத்தின் டைட்டில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த டைட்டிலை மாற்றாவிட்டால் தனுஷ் மற்றும் இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்படும் என எச்சரித்துள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here