வைரலாகும் தனுஷ் படத்தின் ‘டைட்டில்’..! உண்மையை உடைத்த படக்குழு..!

0
89

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவரது 51ஆவது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ‘தாராவி’ என சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், இதுவரை இந்த படத்திற்கு எந்த தலைப்பும் வைக்கவில்லை என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனிடையே நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தது.

அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் இன்று திருப்பதி சென்று நடிகர் தனுஷ் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here