Dhanush: இசை மேஸ்ட்ரோ இளையராஜாவின் பணியை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகவுள்ளது. இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பயோபிக்கை தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
மேலும், இந்த படம் 2025ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் தனது தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாளை மதியம் 12.30 மணிக்கு ஒரு அற்புத பயணம் தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் இது கண்டிப்பாக இளையராஜா பயோபிக் படம் குறித்த பதிவாக தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.