மிரட்டலாக வெளியான ‘ராயன்’ எஸ்.ஜே.சூர்யா போஸ்டர்..!

0
188

‘SJ Suryah’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை இயக்குநர் செல்வராகவன் தான் எழுதியதாக செய்திகள் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான ‘ராயன்’ கதை முழுக்க முழுக்க தனுஷின் கனவு கதையாகும், இந்த படத்தில் நான் வெறும் நடிகனாக மட்டுமே இருக்கிறேன், ஸ்கிரிப்ட் நான் எழுதவில்லை’ என விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த படத்தில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை தனுஷ் தனது ‘X’ தளத்தில் போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த போஸ்டரில் மாஸ் லுக்கில் எஸ்.ஜே.சூர்யா அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, இந்த போஸ்டரை வெளியிட்ட தனுஷுக்கு நன்றி தெரிவித்து எஸ்.ஜே.சூர்யா தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘உங்களது தயாரிப்பில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ‘ராயன்’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகுவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here