‘அடேங்கப்பா!.. தனுஷ் கூறும் ‘எண்ணம் போல் வாழ்க்கை’க்கு பின்னாள் இவ்வளவு அர்த்தம் இருக்கா?..

0
67

தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. மேலும், நேற்று (ஜன.3) இந்தப் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷிடம், அவர் அடிக்கடி கூறும் “எண்ணம் தான் வாழ்க்கை.. எண்ணம் போல தான் வாழ்க்கை” என்ற வசனத்திற்கான அர்த்தம் மற்றும் ‘எண்ணம்’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விகளை தொகுப்பாளர் டிடி கேட்டார்.

முதலாவதாக தோல்வி வந்தால் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்? என கேட்டார். அதற்குப் பதிலளித்த தனுஷ், ‘தோல்வி வந்தால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என கூறினார்.

தொடர்ந்து, ப்ரண்ட்ஸ் விஷயத்தில் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்? என கேட்டார். “ஜி.வி.பிரகாஷ்குமார் மாதிரி. அதாவது கஷ்டம், நஷ்டம் என எல்லாத்துலேயும் கூட இருக்குறவன் தான் நண்பன். அப்படித்தான் ஜி.வி. பிரகாஷ் எனக்கு இருக்கிறார்”என கூறியுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்கள் பற்றிய உங்களுடைய எண்ணம் என்ன? என்ற கேள்விக்கு, ‘சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப்பெரிய காலத்திருடன். உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையின் மதிப்புமிக்க மணித்துளிகளை திருடி கொண்டிருக்கிறது.

நொடிப்பொழுதில் நம்முடைய வாழ்க்கை சட்டென்று முடிந்து விடும். அதில் பாதி நேரம் போனை பார்த்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் இருப்போம். 4 பேர் சேர்ந்த கொஞ்சம் முகத்தை பார்த்து பேசுங்கப்பா. செல்போனை பார்த்து பேசாதீர்கள். அது ஒரு மனநோய். பேசாமல் 90ஸ் காலக்கட்டத்திற்கே போய் விடலாம் போல என தோன்றுகிறது’ என பதிலளித்தார்.

மனநலம் பற்றிய உங்கள் கருத்து? என்ன என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அதனை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் மனதால் தைரியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக நாம் பண்ண வேண்டியது எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என பதிலளித்தார்.

இதையும் படிங்க: ‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழா: விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here