நடிகைக்கு பாலியல் சீண்டல்..! தனுஷ் ரசிகருக்கு தர்ம அடி.! நடந்தது என்ன?..

0
143

சென்னையில் நேற்று நடந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி தனுஷ் ரசிகருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. தனுஷூடன் ஜோடியாக பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜன.03) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ரகுபதியும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் கூட்டமாக தனுஷை நோக்கி ஓடினர். அப்போது அந்த கூட்ட நெரிசலில், அங்கு அமர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா ரகுபதி அந்த ரசிகரை காலில் விழ வைத்து, தர்ம அடி கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக ‘சரக்கு’ பட விழாவில் தொகுப்பாளராக இருந்த இதே ஐஸ்வர்யா ரகுபதியிடம் நடிகர் கூல் சுரேஷ் தவறாக நடந்ததாக செய்தி வெளியானது. ஐஸ்வர்யா ரகுபதியின் அனுமதியின்று அவரை காட்டாயப்படுத்தி மாலை அணிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது அவரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: ‘அடேங்கப்பா!.. தனுஷ் கூறும் ‘எண்ணம் போல் வாழ்க்கை’க்கு பின்னாள் இவ்வளவு அர்த்தம் இருக்கா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here