பாலிவுட் படத்தை தயாரிக்கும் இயக்குநர் அட்லீ..!

0
75

இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் ‘விடி18’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

மேலும், இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here