ஹாலிவுட் படத்தை இயக்கும் அட்லீ..!

0
213

‘Director Atlee’: இயக்குநர் அட்லீ சமீபத்தில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினார். அடுத்ததாக அவர் பிரபல பான் இந்திய ஸ்டாரை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீயின் அடுத்த படத்திற்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், இயக்குநர் அட்லீ தனது அடுத்த படத்தை ஷாருக்கான் மற்றும் விஜய்யுடன் சேர்ந்து இயக்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அட்லீ கொடுத்த பேட்டியில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அடிலீ ஹாலிவுட படத்தை இயக்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லீயிடம் பேட்டி ஒன்றில் ஹாலிவுட் படங்களை இயக்குவீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்த போது, “சினிமாவில் நுழைந்து பாலிவுட்டில் ஜவான் படத்தை இயக்க எனக்கு 8 ஆண்டுகள் ஆனது. இன்னும் 3 ஆண்டுகளில் ஹாலிவுட் படத்தை இயக்குவேன்” என பதிலளித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அட்லீக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here