விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ..!

0
112

Atlee: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபலமானவர் அட்லி. இவர் ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற வெற்றிப் படத்தை தந்தார். அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இயக்கம் மட்டுமின்றி படங்களும் தயாரிக்கிறார் அட்லி. தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஏ பார் ஆப்பிள்’ என்ற நிறுவனத்தில் தமிழில், ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்தார். தற்போது ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார்.

அடுத்து தமிழில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here