‘ஹரி படம் என்றாலே Discipline இருக்கும்’.. ஒழுக்கம் குறித்து அவர் விவரிப்பது என்ன?..

0
72

Director Hari: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் இயக்குநர் என்றால் அது ஹரி தான். இவரது படங்களில் அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். முக்கியமாக குடும்ப செண்டிமெண்ட் கட்டாயம் படத்தில் இருக்கும். சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், சண்டக்கோழி, யானை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர், சமீபத்தில் நடிகர் விஷாலை வைத்து ‘ரத்னம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ‘ரத்னம்’ படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனலில் நேர்காணல் கொடுத்திருந்தார்.

அப்போது, ‘உங்கள் படங்களில் அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒழுக்கத்துடன் காட்டியதற்கு என்ன காரணம்? கதாநாயகன், வில்லன் என அனைவருமே அடுத்தவர்களை மதிக்ககூடியவர்களாக படங்களில் காட்டியுள்ளனர், அது எதற்காக?’ என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த இயக்குநர் ஹரி, “இந்த உலகத்தில் பணம் உள்ளவர்கள் இல்லாதவர்கள் இருக்கின்றனர், அறிவு இருப்பவர்கள் இல்லாதவர்கள் இருப்பார்கள், ஆனால் அனைவரிடமும் ஒழுக்கம் என்பது இருக்கும். அது, போலீசாக இருக்கலாம், பொதுமக்களாக இருக்கலாம், ரவுடியிடம் கூட இந்த ஒழுக்கம் இருக்கும்.

பெரியவர்களைப் பார்த்தால் மரியாதை கொடுக்க வேண்டும் என நினைப்போம் அதுதான் ஒழுக்கம். இப்படி அனைவரிடமும் இந்த ஒழுக்கம் இருக்கும் அதனைப் படங்களிலும் பின்பற்றுகிறேன்” என பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here