விஷால் படத்தால் அடித்த ஆஃபர்.. உடனே ஓகே சொன்ன இயக்குநர் ஹரி..

0
67

‘Director Hari’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு நிறைவு பெற்று ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.

இந்த நிலையில், ரத்னம் படம் வேற லெவலில் வந்துள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் காதலில் விழுந்துள்ளது. உடனே இயக்குநர் ஹரிக்கு அழைப்பு விடுத்த நிறுவனம், அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ஹரி உற்சாகத்தில் இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை தயாரித்து ஹைப்பில் இருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களையும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here