‘யாரும் நான் தான் பெரிய ஹீரோ-னு நினைக்கக்கூடாது’ – இயக்குநர் ஹிரி..!

0
154

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநர்களுல் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தி வெளியான ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படத்தில் மூலம் விஷால் இணைந்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக இயக்குநர் ஹரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்தில் 40 விழுக்காடு பேர் தான் நல்லவர்கள், மீதமுள்ள 60 விழுக்காடு பேர் கெட்டவர்களாக உள்ளனர்.

அந்த நல்லவர்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன் தான் ‘ரத்னம்’. என்னுடைய படங்களில் நீங்கள் பார்த்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்திலும் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.

என்ன தான் பெரிய நடிகர், இயக்குநராக இருந்தாலும் அவர்களது படத்திற்கு புரமோஷன் பெரிய தேவைப்படுகிறது. ‘நான் பெரிய ஆளு’ என்ற நினைப்பில் இருந்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here