திரிஷா விவகாரம்: மறைமுகமாக விஜய்யை தாக்கிய லெனின் பாரதி?

0
190

‘Lenin Bharati’: இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி நடிக்கும் திரைப்படம் ‘மங்கை’. இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் ‘மங்கை’ படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் லெனின் பாரதி கலந்துகொண்டார். தொடர்ந்து மேடையில் அவர் பேசினார்.

அவர் பேசுகையில், “திரிஷா விவகாரம் குறித்து எந்த நடிகரும் பேசவில்லை என கூறுகின்றனர். அவர்கள் எப்படி பேசுவார்கள், இன்றைக்கு உள்ள அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து ஜெயித்து முன்னுக்கு வந்துள்ளனர்.

இன்னைக்கு இருக்கும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கட்டும், அடுத்து நாட்டை ஆளத்துடிக்கும் நடிகர்களாக இருக்கட்டும், எல்லோருமே அவர்களது ஆரம்பக்கட்ட படங்களில் பெண் உடலை வைத்து தான் சினிமாவில் பயணம் செய்து வருகின்றனர்.

ஆகையால் இந்த மாதிரியான சர்ச்சைகளுக்கு இந்த கதாநாயகர்கள் எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். பெண்ணின் உடலை வைத்து சினிமாவில் பயணிக்கு கதாநாயகர்கள் ஒதுபோதும் வாயை திறக்க மாட்டார்கள்” என பேசினார்.

இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, லெனின் பாரதியின் இந்த பேச்சுக்கு பலரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here