முத்தையா இயக்கும் புதிய படம்… மிரட்டலாக வெளியான பர்ஸ்ட் லுக் பேஸ்டர்..

0
138

Director Muthaiya: தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணி கதைகளை இயக்கி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குநர் முத்தையா. ‘குட்டிப்புலி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முத்தையா தொடர்ந்து ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து இயக்குநர் முத்தையா இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை விழா சமீபத்தில் மதுரையில் நடந்தது. இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ‘சுள்ளான் சேது’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தில், தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் நடிக்கின்றனர். பல புதுமுக நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here