‘டெவில்’ படத்திற்கு இசையமைக்கு மிஷ்கின்: ‘எனது இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம்’ – மிஷ்கின் பேச்சு..!

0
164

‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.

இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குந்ர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், ‘டெவில்’ பட நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்டவர்களால் மட்டுமே சினிமாவை நேசிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது.

அதனால், தாய் தந்தையர் இல்லாத, வாழ்க்கையில் கொடுமையான சோகங்களை அனுபவித்த இளைஞர்களை நான் எப்போதும் உதவி இயக்குநர்களாக சேர்த்துக்கொள்ள விரும்புவேன்.

ஒரு படத்தில் கேளிக்கைகள், சுவாரசியமான விஷயங்கள் இருக்கலாம். ஆனாலும், அதை மீறி நெஞ்சைத் தைப்பதுபோல் ஒரு விஷயம் இருக்க வேண்டும். அதுதான் நல்ல திரைப்படத்திற்கான உயிராகும். நடிக்கும்போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகளாக இருக்கமுடியும்.

இசையில் 100 மதிப்பெண் வாங்குபவர்கள் எப்போதும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் தான். நான் இளையராஜாவிடம் இருந்து சண்டை போட்டு வந்த பின்னர் ஆறு ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்.

இந்த நிலையில், தற்போது ‘டெவில்’ என்ற படத்துக்கு இசையமைக்கிறேன். என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என நானே நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இளையராஜா மகள் பவதாரிணி இலங்கையில் உயிரிழப்பு.. அவரது உடல் இன்று மாலை சென்னை வருகை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here