‘மலையாளப் பொறுக்கிகள்’ என சொன்ன ஜெயமோகன் – கடுமையாக விமர்சித்த இயக்குநர் நவீன்..!

0
151

Naveen – Jeyamohan: மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் சிதம்பரத்தையும் படக்குழுவினரையும் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

மக்களிடம் பெரும் ஆதரவையும், பெரும் வசூலையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பெற்றுள்ளது. அதன்படி, இந்த படம் ரிலீஸாகி இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ எனும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர் கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது? என..

மஞ்சும்மல் பாய்ஸ் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன?

நாட்கணக்கில்கூட செய்தி கசிய வில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட காட்சி அது. மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார். ஜெயமோகனின் இந்த பதிவிற்கு கடுமையான விமர்சனம் செய்த மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ ‘தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும், ‘மலையாளப் பொறுக்கிகள்’ என சொல்லியிருக்கும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறுக்கொண்டிருக்கும் இரண்டு தவளைகளே.

தமிழர்கள் – கேரளா சென்றாலும், கேரளத்தவர்கள் – தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே தான் பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த ‘மூடர் கூடம்’ பட இயக்குநர் நவீன் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுகு முதல் ஆளாக தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஜெயமோகன் குறித்து வெளியிடப்பட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here