பார்த்திபன் இயக்கத்தில் புதிய படம்..! டைட்டிலை வெளியிட்ட படக்குழு..!

0
80

‘Director Parthiban’: இயக்குநரரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவரது கடைசி படைப்பான ‘இரவின் நிழல்’ திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

அந்த வகையில், நான் லீனியர் திரைக்கதை முறையில் உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ படம் பெற்றது. இந்த படத்திற்காக பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது பார்த்திபன், புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘டீன்ஸ்’ (Teenz) என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குநர் பார்த்திபன் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’ படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா..! பாடல்கள் கன்பார்மா ஹிட் தான்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here