‘குழந்தைகளை மையப்படுத்திய படம்’ – அடுத்த படத்திற்கு அப்டேட் கொடுத்த பார்த்திபன்…!

0
85

இயக்குநரரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவரது கடைசி படைப்பான ‘இரவின் நிழல்’ திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

அந்த வகையில், நான் லீனியர் திரைக்கதை முறையில் உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ படம் பெற்றது. இந்த படத்திற்காக பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது பார்த்திபன், புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குநர் பார்த்திபன் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (ஜன.20) வெளியிடுவார்” என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை திரிஷா விவகாரம்: ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் நீட்டிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here