‘நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான்’ – இயக்குநர் பேரரசு பேச்சு..!

0
92

இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின் நடிக்கும் திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார். மேலும், ‘அப்பா’ படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார்.

சினாமிகா இரண்டாவது நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் பேரரசு, ‘இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

இது இளையராஜாவின் 1417ஆவது படம். இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டுதான் ஆறுதலடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here