‘தலைவர் 171’ டீசர் பார்த்துவிட்டேன்.. வேற லெவலில் இருக்கு – அனிமல் பட இயக்குநர்..!

0
125

‘Thalaivar 171’: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ‘தலைவர் 171’ படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன்படி, ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.

இந்தப் படம் போதைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ் லுக்கில் இருக்கும் ரஜினியின் கையில் தங்க வாட்ச்களுடன் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டது போல இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, இந்த ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘கழுகு’ என சமூக வலைத்தளங்களில் பரவியது.

‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ஷாருக்கானை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அனுகியுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தற்போது ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷோபனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் அவர் நடித்தார் என்றால், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும், ஷோபனாவும் இணைந்து நடிக்கும் படமாக அமையும்.

இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனனில் பேட்டியளித்த அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி, “‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டது. இந்த டீசரை தான் பார்த்துவிட்டேன், மிகவும் நன்றாக வந்துள்ளது. விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது சந்தீப் ரெட்டியின் பேச்சு டீசர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here