Selvaraghavan: இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘லவ்வர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘லவ்வர்’ படம் குறித்து இயக்குநர் செல்வராகன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “லவ்வர் படம் பார்த்தேன் படத்தை நேசித்தேன். இந்த தலைமுறையினரின் காதலை அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். மிகவும் யதார்த்தமாக இருந்தது, அற்புதமாக படமாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.