மகளின் திருமணத்திற்கு முதலமைச்சரை அழைத்த சங்கர்..!

0
87

Director Shankar: இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுபவர் இயக்குநர் சங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் மற்றும் கமலை வைத்து இந்தியன் 2.3 படங்களை எடுத்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்க தயாராக இருக்கிறார். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே புதுச்சேரியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்றது.

பல்வேறு காரணங்களால் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஸ்வர்யாவுக்கும், சங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இந்த நிலையில், நேற்று இயக்குநர் சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினர்.

முன்னதாக ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம் இரண்டு வீட்டாரின் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த சங்கர் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here