காதலா? காளை மாடா?.. துள்ளிப்பாய காத்திருக்கும் ‘நின்னு விளையாடு’ படம்..!

0
141

‘Ninnu Vilayadu’: சி.சௌந்தராஜன் இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் நடிக்கும் புதிய படம் ‘நின்னு விளையாடு’. இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை நந்தனா ஆனந்த நடிக்கிறார்.

மேலும், இவர்களுடன் சேர்ந்து தீபா சங்கர், பழ.கருப்பையா, பசங்க சிவக்குமார், மதுரை குமரன், சாவித்ரி, சங்கவி, ஜோதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ‘ராஜ் பீகாக் மூவிஸ்’ சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்க, எம்.சரத்குமார் இணைந்து தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு பிச்சுமணி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்.கி தொகுத்து வழங்குகிறார். இந்த படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 7) ‘நின்னு விளையாடு’ படத்தின் ‘அலங்காநல்லூர்’ பாடல் வெளியானது. கவியரசு வரிகளில் செந்தில் கணேஷ் குரலில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. வீரமான வரிகளில், அழகான இசையில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த ‘நின்னு விளையாடு’ படம் குறித்து இயக்குநர் சி.சௌந்தராஜன் கூறுகையில், “காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வு முறையை இந்த படம் பேசுகிறது.

காதலுடன் கலந்த உணர்வுப்பூர்வமான குடும்ப படமாக உருவாகியுள்ளது. குடும்பத்தினருக்கு மத்தியில் ஏற்படும் காதலா? காளை மாடா? என்ற பாசப்போராட்டத்தை மைய கதையாக வைத்து இந்த ‘நின்னு விளையாடு’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சாதி மதங்களை ஒன்றிணைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை முக்கிய புள்ளியாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கூடிய விரைவில் ‘நின்னு விளையாடு’ படம் திரைக்கு வரவுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here