இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.25 ஆம் தேதி மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்னை வீட்டில் அவரது அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அதில், ‘பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.