உச்சக்கட்ட கோபத்தில் வெங்கட் பிரபு.. ரணகளமாகும் ஷூட்டிங் ஸ்பாட்.. விஜய் தான் காரணமா?

0
66

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தளபதியின் 68ஆவது படமான ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கோவளத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் வழக்கத்திற்கு மாறாக இயக்குநர் வெங்கட் பிரபு கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எப்போதுமே படப்பிடிப்பில் ஜாலியாக இருக்கும் வெங்கட் பிரபு தற்போது கடுப்பாக இருக்க காரணம் என்னவென்று தெரியாமல் பணியாளர்கள் இருந்து வருகின்றனர். முக்கியமாக உதவி இயக்குனர்களை கண்டமேனிக்கு கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபுவின் கோபத்திற்குப் பின்னால் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நடிகர் விஜய், வெங்கட் பிரபுவிடம் இந்தப் படம் சீக்ரட்டாக இருக்க வேண்டும் எனவும் முக்கியமான காட்சிகள் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் எனவுக் கூறியுள்ளார்.

ஆனால், அவர் கூறியதுபோல இல்லாமல், இந்தப் படத்தின் அனைத்து ரகசியங்களும் கசிந்துள்ளது. மேலும், படத்தின் டைட்டில் கூட லீக் ஆகியது. இதனால், நடிகர் விஜய், வெங்கட் பிரபு மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக படத்தின் டைட்டில் லீக் ஆன சம்பவத்தன்று இயக்குநர் வெங்கட் பிரபு, தனது உதவி இயக்குநர்களை அழைத்து சரமாரியாக திட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் தற்போது வெங்கட் பிரபு படப்பிடிப்பில் கோபமாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி’ – நடிகர் விஷால்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here