சினிமாவில் தனது வாரிசை களம் இறக்கிய விக்ரமன்..! துணையாக இருக்கும் முக்கிய நடிகர்கள்..!

0
119

Vikraman: தமிழ் சினிமாவில் ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து ‘பூவே உனக்காக’, ‘சூர்யவம்சம்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘வானத்தை போல’ என பல்வேறு படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

எதார்த்தமான கதைக் களத்தில் மக்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இவரது படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஒரு குடும்பப் படம் என்றாலே விக்ரமன் தான் நினைவுக்கு வரும் வகையில் அவரது படைப்பு அமைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். மேலும், கே.எஸ். ரவிகுமார் தயாரிகிறார். இந்த படத்திற்கு ‘ஹிட் லிஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திரகனி, முனிஸ்காந்த், உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here