இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். முன்னதாக விஷ்ணு வர்தன் தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கினார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. தற்போது தமிழில் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மேலும், இந்த படம் ஒரு ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.